54. இடங்கழி நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 54
இறைவன்: ?
இறைவி : ?
தலமரம் : ?
தீர்த்தம் : ?
குலம் : மன்னர்
அவதாரத் தலம் : கொடும்பாளூர்
முக்தி தலம் : கொடும்பாளூர்
செய்த தொண்டு : அடியார் வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஐப்பசி - கிருத்திகை
வரலாறு : கொடும்பாளூர் என்னும் தலத்தில் அவதரம் செய்தார். பெரும் சிவபக்தரான இவர் ஒரு குறு நில மன்னர். தம் பண்டாரத்தில் நெல் திருடிய ஒருவனை அக் குற்றத்திற்காக விசாரிக்க்கும்போது சிவனடியார்களுக்கு அமுதளிக்கவே தான் திருடியதாகக் கூறினான். மன்னர் பண்டாரம் அனைத்தையும் திறந்து விட்டு சிவனடியார்களுக்கு எனச் செலவு செய்யுமாறு கூறினார்.
முகவரி : அருள்மிகு. இடங்கழியார் திருக்கோயில், கொடும்பாளூர்– புதுக்கோட்டை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 11.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : திரு. ஏ.சுந்தரராஜன்
திருச்சி-மதுரை சாலை
கொடும்பாளூர்

இருப்பிட வரைபடம்


இடங்கழியார் எனவுலகில் ஏறுபெரு நாமத்தார்
அடங்கலர்முப் புரமெரித்தார் அடித்தொண்டின் நெறியன்றி
முடங்குநெறி கனவினிலும் உன்னாதார் எந்நாளும்
தொடர்ந்தபெருங் காதலினால் தொண்டர்வேண் டியசெய்வார்

- பெ.பு. 4117
பாடல் கேளுங்கள்
 இடங்கழியார்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க